| 
         
          | 3773. | புரிதரு 
            சடையினர் புலியுரி |   
          |  |      யரையினர் 
              பொடியணிந்துதிரிதரு மியல்பினர் திரிபுர
 மூன்றையுந் தீவளைத்தார்
 வரிதரு 
              வனமுலை மங்கையொ
 டொருபக லமர்ந்தபிரான்
 விரிதரு துருத்தியா ரிரவிடத்
 துறைவர்வேள் விக்குடியே.             7
 |         7. 
        பொ-ரை: சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர். புலியின் தோலை அரையில் உடுத்தவர். திருவெண்நீற்றை அணிந்து கொண்டு திரியும் 
        இயல்பினர். திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர். சந்தனக் 
        கீற்றுக்கள் எழுதப் பெற்ற
 அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்
 துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி
 என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார்.
      கு-ரை: 
        புரிதரும் - முறுக்குண்ட சடையினர், தீவளைத்தார் - தீயால் வளைவித்து எரித்தவர், வரிதரு - சந்தனக்கீற்றெழுதிய.
 வனமுலை; வனம் - அழகு.
 |