| 3779.  | 
           மந்தமா 
            யிழிமதக் களிற்றிள | 
         
         
          |   | 
               மருப்பொடு 
            பொருப்பினல்ல 
            சந்தமா ரகிலொடு சாதியின் 
                 பலங்களுந் தகையமோதி 
            உந்துமா காவிரி வடகரை 
                 யடைகுரங் காடுதுறை 
            எந்தையா ரிணையடி யிமையவர் 
                 தொழுதெழு மியல்பினாரே.           2 | 
         
       
	  
             2. 
        பொ-ரை: சிறு அளவில் மதம் சொரியும் யானைக்  
        கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய்  
        ஆகிய பயன்தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி,  
        அலைகளால் அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள  
        குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்  
        எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது  
        எழும் தன்மையர். 
            கு-ரை: 
        மந்தமாய் - சிறு அளவினதாக, இழி - சொரியும்;  
        மதம் என்றதனாலும், இள மருப்பு என்றதனாலும், யானைக்  
        கன்றுகளின் தந்தங்கள் என்க. தந்தங்களை உந்தும் எனவே யானைக் கன்றுகளையும் உந்தும் 
        என்பது அருத்தாபத்தியாற் கொள்ளப்படும்.  
        (சந்தனம், அகில், சாதி) யாகிய, பலன்கள் - பயன் தரக் கூடிய இம்  
        மரங்களையும். தகைய - தன்னிடத்து விழ. மோதி - சாடி. உந்தும் -  
        அடித்துவரும் காவிரி. எந்தையார் தமது இணையடியை இமையவர்  
        தொழுது எழும் தன்மையினர். 
       |