| 
         
          | 3790. | பொறிகிள 
            ரரவமும் போழிள |   
          |  |      மதியமுங்கங் 
              கையென்னும்நெறிபடு குழலியைச் சடைமிசைச்
 சுலவிவெண் ணீறுபூசிக்
 கிறிபட 
              நடந்துநற் கிளிமொழி
 யவர்மனங் கவர்வர்போலும்
 செறிபொழி றழுவிய திருநெல்வேலி
 யுறை செல்வர்தாமே.                  3
 |         3. 
        பொ-ரை: புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவனையும் சடைமீது சுற்றி 
        அணிந்து, வெண்மையான
 திருநீற்றைப் பூசி, பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி
 போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து
 முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான்,
 நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும்
 அருட்செல்வர் ஆவார். அவரை வழிபடுவீர்களாக.
      கு-ரை: 
        நெறிபடு - தழைத்த. குழலியையும், என உம்மையை விரிக்க. சுலவி - கலந்தணிந்து; (சுலவி) இகரம் விசையெச்சவிகுதி,
 கிறி - விளையாட்டு, பட - பொருந்த, நடந்து - பிச்சைக்குச் சென்று,
 கிளிமொழியவர் - தாருகாவனத்து முனிபத்தினியர் முதலியோர்,
 மனம் கவர்வர் போலும்.
 |