3794. அக்குலா மரையினர் திரையுலா
 

     முடியின ரடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
     சதுரனார் கதிர்கொள்செம்மை
 புக்கதோர் புரிவினர் வரிதரு
     வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                 7

     7. பொ-ரை: வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற
சோலைகளையுடைய, எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திரு
நெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய
சிவபெருமான், சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர். அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய
சடைமுடியை
உடைய தலைவர். அவரை மதியாது தக்கன் செய்த
யாகத்தை அழித்த திறமையையுடையவர். செவ்வொளி படரும்
சடையினர். அவரை வழிபடுவீர்களாக.

     கு-ரை: அக்கு - அக்குப்பாசி. உலாம் - அசைகின்ற.
அரையினர் - இடுப்பையுடையவர். திரை - (கங்கை) அலைகள்.
உலாம் - உலாவும். முடியினராகிய அடிகள். தக்கனார் - உயர்
சொற்றானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று என்பர்
சேனாவரையர். (தொல், சொல் 27சூ. உரை.) சாடிய - அழித்த.
சதுரனார் - திறமையையுடையவர். கதிர்கொள் செம்மை புக்கது. ஓர்
புரிவினர் - செவ்வொளி பொருந்திய சடையை யுடையவர், புரிவு -
முறுக்குதலை உடைய சடைக்கு ஆயினமையின் தொழிலாகுபெயர்,
புரிசடை என வருதலுங் காண்க. வரிதரு - கீற்றுக்களையுடைய
வண்டு, முரலுதல் - மூக்கால் ஒலித்தல்.