3801. |
பரவின
வடியவர் படுதுயர் |
|
கெடுப்பவர்
பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர்
படுதலைப் பலிகொடேகும்
இரவினர்
பகலெரி கானிடை
யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே. 3
|
3.
பொ-ரை: இறைவர் தம்மை வணங்கிப் போற்றும்
அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர். தம்மிடத்து
அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர்.
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர். பிரமகபாலம் ஏந்திப்
பிச்சை ஏற்றுத் திரிபவர். நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில்
இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர். பாம்பை
அணிந்துள்ளவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும்.
கு-ரை:
தம்மைத் துதிக்கும் அடியவர் படும் துயரத்தை
அழிப்பவர். அன்பில்லாரிடத்தே ஒளித்துக்கொள்பவர், கனல் அன்ன
உருவினர். படுதலை - இறந்தாரது தலையில். பலி கொடு -
பிச்சையேற்றலை மேற்கொண்டு, ஏகும் - ஊர்தோறும் செல்கின்ற.
இரவினர் - இரத்தலையுடையவர். பகல் எரி - நண்பகலைப்போலச்
சுடுகின்ற. முதுகாட்டில், திருக்கூத்தாடிய திருக் கோலத்தையுடையவர்.
அரவத்தைப் பூண்டவர், அவர் அரிவையோடு இருக்கும் இடம்.
அம்பர் மாகாளம். இரவினர் - பகலெரிகான் - சொன் முரண்.
|