3807. |
வரியரா வதன்மிசைத் துயின்றவன் |
|
றானுமா
மலருளானும்
எரியரா வணிகழ லேத்தவொண்
ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியரா மடியவர்க் கணியராய்ப்
பணிவிலா தவருக்கென்றும்
அரியரா யரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே. 9 |
9.
பொ-ரை: வரிகளையுடைய பாம்புப் படுக்கையில்
பள்ளிகொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்
உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான்
உயர்ந்து நின்றவர். தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு
அணியராகியும், பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர்.
அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
எரியர் ஆ(க) - நெருப்பு உருவம் உடையராகி,
(துயின்றவனும் மலருள்ளானும்; ஏத்த வொண்ணாவகை) உயர்ந்தும்
அன்றிப் பிரியராம் அடியவர்க்கு - தம்மிடத்துப் பிரியமுடையவர்கள்
ஆகிய அடியவர்களுக்கு, அணியர் ஆகியும், பணிதல்
இ்ல்லாதவருக்கு அரியர் ஆகியும், (அரிவையோடு) இருப்பது
அம்பர்மாகாளம் என்க.
|