| 
         
          | 3809. | செம்பொன்மா 
            மணிகொழித் தெழுதிரை |   
          |  | வருபுன 
            லரிசில்சூழ்ந்த அம்பர்மா காளமே கோயிலா
 வணங்கினோ டிருந்தகோனைக்
 கம்பினார் நெடுமதிற் காழியுண்
 ஞானசம் பந்தன்சொன்ன
 நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம்
 வினைநலம் பெறுவர்தாமே.             11
 |        11. 
        பொ-ரை: செம்பொன்னையும், இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த
 திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள,
 உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சங்கு,
 சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய
 மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
 இத்திருப்பதிகத்தை விரும்பி, நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை
 இல்லை. அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர். இது உறுதி.
       கு-ரை: 
        (செம்பொன்னையும் இரத்தினங்களையும் கொழித்துக் கிளம்பி அலைவரும் நீரையுடைய 
        அரிசிலாறு சூழ்ந்த அம்பர்
 மாகாளமே கோயிலாக அணங்கினோடு இருந்த,) கோனை -
 தலைவனை, கம்பின் ஆர் நெடுமதில் - சங்கு, சுட்ட
 சுண்ணாம்பினால் சுதை பூசப்பட்ட நெடிய மதில். கம்பு -
 சுண்ணாம்புக்கு ஆனது கருவியாகுபெயர், சொன்ன -
 சொன்னவற்றை, (வினையாலணையும் பெயர்,) நம்பி - விரும்பி, நம்பு
 என்பது உரிச்சொல், நாள்மொழிபவர் - நாள்தோறும்
 பாடுபவர்களுக்கு, வினை இல்லையாம், நலம் பெறுவர்.
 |