3811. |
வேதியர்
தொழுதெழு வெங்குரு மேவிய |
|
ஆதிய
வருமறை யீரே
ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே. 2 |
2.
பொ-ரை: நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற
அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை
விரும்பி வீற்றிருந்தருளும், முதன்மையான வேதத்தின்
பொருளானவரே! முதன்மையான வேதத்தின் பொருளானவரான
உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத், தோத்திரம் செய்பவர்கள்
சிவஞானம் உடையவர்கள் ஆவர்.
கு-ரை:
ஆதிய அருமறையீர் - முதன்மையான வேதத்தின்
பொருளாய் உள்ளீர், வேதம் பிரபல சுருதி எனப்படுதலின்
முதன்மையானது என்னப் பட்டது. இனி ஆதியென்பதற்குப்
பழமையான எனலும் ஆம். அலர் கொடு - மலர்கள் கொண்டு
(பூசித்து) ஓதியர் - தோத்திரம் செய்பவர்கள், உணர்வு உடையோர் -
சிவஞானம் உடையவராவார். இனி ஓதி என்பதற்கு அறிவு எனவும்
பொருள் உண்மையால் பூசித்து உணர்பவர் தாம் உணர்வுடையோர்,
அல்லாதார் உணர்விலிகளே எனலுமாம். அது உடையரெனப்படுவது
ஊக்கம் அஃதிலார் உடையது உடைய ரோமற்று (குறள்.591)
என்புழிப் போல.
|