3813. |
விண்டலர்
பொழிலணி வெங்குரு மேவிய |
|
வண்டமர்
வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே. 4 |
4.
பொ-ரை: முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய
சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும்
நீண்ட சடையுடைய சிவபெருமானே! வண்டுகள் விரும்பும்
சடையினையுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய
தொண்டர்கள் துயரும், பிணியும் அற்றவர்கள் ஆவர்.
கு-ரை:
விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற (பொழில்),
வண்டு அமர்சடை - வண்டு விரும்பும் சடை, எனவே
மலர்மாலையணிந்த சடையென்பது பெறப் பட்டது. அமர்தல் -
விரும்புதல், (துயர்பிணி, இலர்) துயர் - உள்ளம் பற்றியது, பிணி -
உடலம் பற்றியது இலர் - இல்லாதவர் ஆவார்.
|