3815. |
வெந்தவெண்
பொடியணி வெங்குரு மேவிய |
|
அந்தமில்
பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே. 6 |
6.
பொ-ரை: சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை
அணிந்து, திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே!
அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத்
தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும்.
கு-ரை:
வெந்த - சுடப்பட்ட, வெண்பொடி - வெண்மையான
திருநீறு, அந்தம் - முடிவு, அழிவு. நீறு அணி அந்தம் இல்
பெருமையினீர் - திரு நீற்றையணிந்து, அதனால்தாம்
அழிவில்லாதவன் எனக்காட்டும் பெருமையையுடையீர், சிவனவன்
திரடோண்மேல், நீறு நின்றது கண்டனை என்னும் திருவாசகமும்
இக்கருத்தாதல் காண்க.
|