3816. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
  அழன்மல்கு மங்கையி னீரே
அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு
தொழவல்லல் கெடுவது துணிவே.         7

     7. பொ-ரை: திருவிழாக்கள் நிறைந்ததும், சோலைகள் அழகு
செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவ
பெருமானே! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை
மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம்.

     கு-ரை: விழ - விழா (விழவு) மல்கும் - தங்கிய, உம்மை
அலர் கொடு தொழ அல்லல் கெடுவது துணிவு - நிச்சயம்.