3817. |
வித்தக
மறையவர் வெங்குரு மேவிய |
|
மத்தநன்
மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே. 8 |
8.
பொ-ரை: சாமர்த்தியமுடைய, நான்மறைகளைக் கற்றுவல்ல
அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள,
சிவபெருமானே! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும்
சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார்.
கு-ரை:
வித்தகம் - சதுரப்பாடு (சாமர்த்தியம்) மறையவர்க்குச்
சதுரப் பாடாவது - பல கடவுளர்க்குத் தலைமை கூறும் அதன்
பொருளை நடு நிலைமையொடு உணர்ந்து, உண்மையிது உபசாரம்
இது என உணரும் வன்மை. மத்த மலர் - பொன்னூமத்த மலர்.
சித்தம் உடையவர் திரு - என்றது மோட்ச சாம்ராச்சியத்தை
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே என்றவாறு.
|