3818. |
மேலவர்
தொழுதெழு வெங்குரு மேவிய |
|
ஆலநன்
மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே. 9 |
9.
பொ-ரை: மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே! விடம்
தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம்திருவடிகளைத்
தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர்.
கு-ரை:
ஆலம் நன்மணிமிடறு - விடம் தங்கிய நல்ல
காளகண்டம், சீலம் வழிபாட்டு முறை. அது பெரும்புலர்காலை
மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி (தி.4.ப.31.பா.4.) எனும் திரு
நேரிசையிற் கூறியது முதலியன.
|