3822. |
இளமதி
நுதலியொ டின்னம்பர் மேவிய |
|
வளமதி
வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமே வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே. 3 |
3.
பொ-ரை: பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய
உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே!
குளிர்ச்சி பொருந்திய சந்திரனை
அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர்.
கு-ரை:
இளமதி - பிறைச்சந்திரன் போன்ற. நுதலி -
நெற்றியை உடைய அம்பிகை. வளம் மதி - தன்னொளி, அமுத
கிரணமாயிருத்தல், பயிர் பச்சைகளை வளர்த்தல், கடல்
கொந்தளிப்பித்தல் முதலிய வளங்களையுடைய மதி. வளர் -
தங்குகின்ற என்னும் பொருள்தரும்.
உளம் - மனம். மதிமிக
உடையோர் - பேரறிவுடையவராவர்.
|