3828. |
இயலுளோர்
தொழுதெழு மின்னம்பர் மேவிய |
|
அயனுமா
லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே. 9 |
9.
பொ-ரை: நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற
திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறிவதற்கரிய உம்
திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.
கு-ரை:
இயல்உளர் - சமய விசேடாதி தீக்கை பெற்ற
தகுதியுடைய அடியார், மறுபிறப்பு இலர் ஆவர்.
|