3830. |
ஏடமர்
பொழிலணி யின்னம்பர் ரீசனை |
|
நாடமர்
ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே. 11 |
11.
பொ-ரை: இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி,
தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலன
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர்.
கு-ரை:
ஏடு - இதழ், மலருக்கானமையின் சினையாகுபெயர்,
தேசமெல்லாம் விரும்பும் ஞானசம்பந்தன், நல்தமிழ் பாடவல்லார் பழியிலர் ஆவர்.
|