| 
         
          | 3831. | நல்வெணெய் 
            விழுதுபெய் தாடுதிர் நாடொறும் |   
          |  | நெல்வெணெய் 
            மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
 சொல்வண மிடுவது சொல்லே.                1
 |        1. 
        பொ-ரை: நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர்.
 திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளும் சிவபெருமானே! திருநெல்வெண்ணெய் என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச்
 சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும்.
      கு-ரை: 
        நல்வெ(ண்)ணெய் விழுது - நல்ல வெண்ணெயை உருக்கிய நெய்யை. பெய்து - ஏனைய பால், தயிர், கோமயம்,
 கோசலம் என்பவற்றோடு நாள்தோறும் பஞ்சகவ்யமாகக் கூட்டி
 நாள்தோறும் ஆடுதிர் - திருமஞ்சனம் கொண்டருள்வீர், உம்மை
 நாள்தோறும் துதிக்கும் சொற்களே, பயன்தரும் சொல்லெனப்படுவன.
 வண்ணம் - அழகு, சொல்லுக்கு அழகாவது, சுருங்கச் சொல்லல்
 முதலிய பத்தும். சொல் இடுவது - துதிப்பது, புகழ்வது, வாழ்த்துவது
 முதலியன. தீவண்ணர் திறம்ஓருகாற் பேசா ராகில் பெரும் பற்றப்
 புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. வணங்கத்
 தலைவைத்து, வார்கழல் வாய் வாழ்த்தவைத்து என்பன இங்குக்
 கொள்ளத்தக்கன.
 |