3833. |
நிறைவிரி
தொல்புகழ் நெல்வெணெய் மேவிய |
|
அரைவிரி
கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே. 3 |
3.
பொ-ரை: வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான
புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இடையில் விரித்துக் கட்டிய
கோவணத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு கோவணத்தை
விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து, உமது
புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
கு-ரை:
நிரை - வரிசை வரிசையாக, விரி - உலகமெங்கும்
விரிந்த, (தொல் - புகழ்) அரையின் விரித்துக் கட்டிய
கோவணத்தையுடையீரே. உம்மை அலர்கொடு - மலர்
முதலியவற்றால்(பூசித்து) உமது புகழை விரிவாகத்துதித்துப்பாடுவோர்
உயர்ந்தோர் ஆவர். பூசித்து என ஒரு சொல் வருவிக்க.
|