| 
         
          | 3834. | நீர்மல்கு 
            தொல்புகழ் நெல்வெணெய் மேவிய |   
          |  | ஊர்மல்கி 
            யுறையவல் லீரே ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
 பார்மல்கு புகழவர் பண்பே.                  4
 |  
             4. 
        பொ-ரை: நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில்
 நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே! அவ்வாறு அவ்வூரில்
 நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது
 தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள்
 இயல்பாகும்.
       கு-ரை: 
        நீர்மல்கு - நீர்வளம்பொருந்திய, நெல்வெண்ணெய் மேவிய ஊர் - நெல்வெண்ணெயென்னும் பெயர் பொருந்திய ஊரில்.
 மல்கி - நிலைபெற்று, உறையவல்லீர் - வாழ்தலையுடையீர், உம்மை
 எப்பொழுதும் ஒழியாது நினைத்திருத்தல் உலகில் உயர்ந்த
 புகழையுடைய சிவஞானிகள் இயல்பாம். இருமை வகைதெரிந்
 தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (குறள் - 23)
 என்புழியும் இவ்வாறு வருதல் காண்க.
 |