| 
         
          | 3838. | நெருக்கிய 
            பொழிலணி நெல்வெணெய் மேவியன் |   
          |  | றரக்கனை 
            யசைவுசெய் தீர அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
 திருக்கவல் லாரிட ரிலரே.                  8
 |  
             8. 
        பொ-ரை: நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுப வரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச்
 செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச்
 செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே
 இல்லாதவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        நெருக்கிய - நெருங்கிய என்பதன் வலித்தல் விகாரம். அசைவு செய்தீர் - வலிதளரச் செய்தீர்.
 |