3841. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை
  நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.                 11

     11. பொ-ரை: நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான
புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத்
தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப்
பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.

     கு-ரை: ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் -
சொல்வதில் மகிழ்ச்சி மிக்கவர்: - மகிழ்ச்சிமிக்குச் சொல்வோர்.
(துயர் இலர் ஆவர்).