3851. |
செய்த்தலை
புனலணி சிறுகுடி மேவிய |
|
புத்தரோ டமண்புறத்
தீரே
புத்தரொ
டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடியப் பரிசே. 10
|
10.
பொ-ரை: வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப்
புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி
வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக்
கொள்வர்.
கு-ரை:
செய்த்தலை - வயல்களினிடத்து. புனல் - நீர். அணி -
அழகு செய்கின்ற. சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டுரி. உம்மைப்
போற்றுதலே பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர். பரிசு -
பேறு. கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா
விறலின் விளங்கினார் (தி.12 திருக்கூட்டச்சிறப்பு.8) என்றதும்
நோக்குக.
|