| 
         
          | 3855. | விரைமலி 
            பொழிலணி மிழலையு ளீரொரு |   
          |  | வரைமிசை 
            யுறைவதும் வலதே வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
 உரைசெயு மவைமறை யொலியே.              3
 |       3. பொ-ரை: 
        நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
 நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே. கயிலைமலையில் வாழும் 
        பெருமையுடைய உம்மைப் போற்றிப்
 புகழ்வன வேதங்கள்.
       கு-ரை: 
        விரை - வாசனை. ஒரு வரை என்றது கயிலைமலையை. வலது - திறப்பாடுடையது. வன்மை என்னும்
 பகுதியடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று. ஈற்றடியின்
 பொருளாவது:- நீரே பொருளாந்தன்மையை உலகிற்கு எடுத்து
 உரைப்பவை வேதங்களே. அவை வாசகம். அவற்றின் வாச்சியம்
 அடிகளீர் என்பது குறிப்பெச்சம்.
 |