| 
         
          | 3856. | விட்டெழில் 
            பெறுபுகழ் மிழலையு ளீர்கையில் |   
          |  | இட்டெழில் 
            பெறுகிற தெரியே இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
 அட்டது வரைசிலை யாலே.                 4
 |  
             4. 
        பொ-ரை: மிகுந்த அழகும், புகழுமுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில்
 ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான
 சிவபெருமானே! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது
 மேருமலையை வில்லாக வளைத்தும் (அக்கினியைக் கணையாக
 எய்தும்) அல்லவா_
      கு-ரை: 
        விட்டு எழில் - அழகு தங்கி, அதனாற் புகழ்பெறுகின்ற மிழலை. விட்டு - இப்பொருட்டாதலைப் புறப்பொருள்
 வெண் பாமாலை வஞ்சிப்படலம் 18 ஆம் பாட்டு உரையான் அறிக.
 கையில் இட்டு - இடப்பெற்று. அதனால் அழகுடையதாகியதும்
 நெருப்பே. அழகனைச் சேர்ந்தமையால் அழகில் பொருளும்
 அழகியதாயிற்று. அது நாறுபூம் பொழில் நாரையூர் நம்பனுக்
 காறுசூடினும் அம்ம அழகியே என்பதாலும் உணர்க. கையது கனல்,
 எரித்ததும் கனல் ஆயின், வரைசிலை எற்றுக்கு? உமது தன்மை
 அறிவாரார் என்ற குறிப்பு.
 |