3857. |
வேனிகர்
கண்ணியர் மிழலையு ளீர்நல |
|
பானிக
ருருவுடை யீரே
பானிக ருருவுடை யீரும துடனுமை
தான்மிக வுறைவது தவமே. 5 |
5.
பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய
கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற, நல்ல பால் போன்ற
நிறமுடைய சிவபெருமானே! பால் போன்ற நிறமுடைய உம்முடன்
உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும்.
கு-ரை:
வேல் நிகர் கண்ணியர் - வேலை யொத்த
கண்களையுடைய பெண்கள் வாழும் மிழலை. ந(ல்)ல பால் நிகர் -
பாலையொத்த. உரு - நிறம். சதாசிவமூர்த்தியின் நிறம் வெண்மை
என்பதால் பால் நிகர் உருவுடையீர் என்னப்பட்டது.
|