| 
         
          | 3858. | விரைமலி 
            பொழிலணி மிழலையு ளீர்செனி |   
          |  | நிறையுற 
            வணிவது நெறியே நிறையுற வணிகதொர் நெறியுடை யீரும
 தரையுற வணிகவன வரவே.                  6
 |  
             6. 
        பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளியுள்ளவரும், மண்டையோட்டால் ஆகிய மாலையை
 அணிந்துள்ளவருமான ஆளுகையையுடைய சிவபெருமானே! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய 
        நீவிர் உமது அரையில்
 கச்சாகக் கட்டியது அரவமே.
       கு-ரை: 
        செ(ன்)னி நிரை - தலைமாலை. நிரை - வரிசை. வரிசையாகக் கோத்த மாலையையுணர்த்தலால் பண்பாகுபெயர்,
 மண்டையோட்டைக் கோத்தணிந்தது. நெறியே - முறையேபோலும்,
 நெறியென்றது அமுது உண்டும் வானவர் சாவ, விடமுண்டும்
 சாவான்தான் ஒருவனே எனத் தெரிவித்தற்கு, உமது அரை உற:
 அணிவதும் அரவே. அரை நாண் ஆகவும் கச்சையாகவும்,
 கோவணமாகவும் அணிந்தமையால், அணிவன எனப் பன்மையாற்
 கூறினர். அரவு:- (அரவுகள்) பால் பகா அஃறிணைப்பெயர்.
 |