3859. |
விசையுறு
புனல்வயன் மிழலையு ளீரர |
|
வசையுற
வணிவுடை யீரே
அசையுற வணிவுடை யீருமை யறிபவர்
நசையுறு நாவினர் தாமே. 7 |
7.
பொ-ரை: வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க
வயல்களை உடைய திருவீழிமிலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றவரும், அரவம் அசையும்படி ஆபரணமாக
அணிந்துள்ளவருமான சிவபெருமானே! அவ்வாறு அசையும்
அரவத்தை ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே, தாம்
கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப்
பொருளை உபதேசிக்கும் வல்லுநர் ஆவர்.
கு-ரை:
அரவு அசைஉற அணிவு உடையீர் - பாம்பை
அசையும்படி அணிதலையுடையீர். உம்மை அறிபவரே உண்மைப்
பொருளை உபதேசிக்க வல்லுநர் ஆவர். அவர் கூறுவனவற்றை
அனைவரும் விரும்பிக்
கேட்பவர் என்பது ஈற்றடியின் கருத்து.
நசை உறும் - (கேட்போர்) விரும்பும். நாவினர் - பேச்சையுடையவர்.
நா - கருவியாகுபெயர்.
|