3864.
|
முரசதிர்ந்
தெழுதரு முதுகுன்ற மேவிய |
|
பரசமர்
படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே. 1 |
1.
பொ-ரை: பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு
அதிர்ந்து பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய
சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி
வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்
. கு-ரை:
பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை
எழுப்பும் முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம்
பெயரொட்டு. அமர் - பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர்.
இடைப்பிறவரல். பல நாடுகளுக்கு அரசர் ஆவதால் பன்மையாற்
கூறினர்.
|