3867. |
முருகமர்
பொழிலணி முதுகுன்ற மேவிய |
|
உருவமர்
சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே. 4 |
4.
பொ-ரை: வாசனை பொருந்திய சோலைகள் அழகு
செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினையுடையவரே!
அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும்,
புகழும் உடையவர்.
கு-ரை:முருகு
- வாசனை, உரு அமர் - அழகு பொருந்திய.
திரு - ஐசுவரியம். தேசு - தேஜஸ், புகழ்.
|