3868. |
முத்தி
தருமுயர் முதுகுன்ற மேவிய |
|
பத்து
முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் வவ்வடி யாரே. 8 |
8.
பொ-ரை: முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும்,
இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான
சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த
உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.
கு-ரை:
முடிபத்தும் என்க. சித்தம் நல் - நல்ல சித்தமுடைய
அடியவர்.
|