3869. |
முயன்றவ
ரருள்பெறு முதுகுன்ற மேவியன் |
|
றியன்றவ
ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 9 |
9.
பொ-ரை: தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய
பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய
சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய
உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத்
தலைக்கூடுவர்.
கு-ரை:
முயன்றவர் - தவம் புரிந்தோர் தவம் முயல்வார்
என வந்தமை (திருமுறைப் பதிகம்) அறிக. இயன்றவர் - தம்
செருக்காற் காணத் தொடங்கிய பிரம விட்டுணுக்களால் அறிவரியீர்.
பயன்தலை நிற்பவர் - பயன்பெறுவர்.
|