3871. மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
  நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.                    11

     11. பொ-ரை: அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத்
திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர்
ஆவர்.

     கு-ரை: மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்தசோலை.
பாடிய அவர் பழியிலர் ஆவர் என்க.