3873. |
கொங்கியல்
பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் |
|
கோமள
மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும்
பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென்
சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே. 2 |
2.பொ-ரை:இயற்கைமணம்
பொருந்திய அழகிய கூந்தலையும்,
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா
தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும்
பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான்
எனது உள்ளத்தில் புகுந்து என் வநையல் கழன்று விழுமாறு செய்து,
எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றுருந்தருளும் ஊர்
உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம்
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கொங்கு இயல் - (இயற்கையாகவே) வாசனை
பொருத்திய. பூகுழல் - பொலிவுபெற்ற கூந்தவையும். கொவ்வைச்
செவ்வாய - கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயையுமுடைய.
கோமளம் மாது - மென்மைத் தன்மை பொருந்திய உமையாள். பங்கு
இயலும் - ஒரு பாகம்
பொருந்திய திருமேனி முழுவதும். பால்
போன்ற வெள்ளி திருநீற்றைப்பூசி. சாயல் - தோற்றப் பொலிவு. துங்கு - (துங்கம்)
உயர்வு. ஞானம் - ஞான என்று வந்ததுபோல (சித்தியார்)
துங்கு எனக்கடைக்குறைந்து வந்தது.
|