3874. |
மத்தக்
களிற்றுரி போர்க்கக் கண்டு |
|
மாதுமை
பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடி யேறூர்
தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்ட
வொருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டு பாடுந்
தோணி புரந்தானே. 3 |
3.பொ-ரை:மதம்
பிடித்த யானையின் தோலை உரித்துப்
போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தெளியச்
சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர்
இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த
மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில்
வந்து உஎனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல
இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:மத்தம்
- மதத்தால் எய்திய மயக்கம். மாதுமை
பேதுறலும் - அஞ்சின அளவில். சித்தம் தெளிய - அவரது மனம்
தெளிய (பயம்நீங்கித்) தெளியும்படி. நின்று ஆடி - நின்று
திருவிளையாடல் செய்தவர். சில்பலி - சிறிது அளவினதாக இடும்
பிச்சை ஐயம் புகூஉம் தவசி கடிஞை போற், பைய நிறைத்து விடும்
(நாலடியார். 99) என்றதும் காண்க. ஒத்தபடி வந்து - பிச்சைக்கு
வருவோர் போலத்துக்கேற்ற விதமாக வந்து. துத்தம் - சப்த சுரத்தில் ஒன்று. உபலட்சணத்தால்
ஏழிசைகளையும் கொள்க.
|