3876. வெல்பற வைக்கொடி மாலு மற்றை
       விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய
     தாய்ப்ப ணிந்தஞ்
செல்வறநீண்டெஞ் சிந்தைபொண்ட
     செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத்
     தோணி புரந்தானே.                   9

     9.பொ-ரை:கருடக்கொடிடையு திருமாலும், நறுமணமிக்க
தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய்
உருக்கொண்டு கீழே அகழ்ந்து கென்றும், அன்னப் பறவையாய்
உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம்
உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம், தொன்மையான பறவைகள் சுமந்த ஓங்கியுள்ள நன்னெறி
மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை:பறவைக்கொடி - கருடக்கொடி. பறவை - பொதுப்
பெயர், சிறப்பிப்பெயர்ப் பொருளில் வந்தது. பல்வறவைப்படியாய் -
பலபறவைகளும் ஓருருவுகொண்டு பறந்தாற்போல. உயர்ந்தும் -
உயரப் பறந்து சென்றும், உயர்ந்து பொதுவினை. சிறப்புவினைப்
பொருளில் வந்தது. ‘உயர்ந்தும் பணிந்தும் உணரான’ என இத்
தொடர் திருக்கொவை யாரினும் வருவது; இத்தொடர் இங்கு எதிர்
நிரனிறைப் பொருளில் வந்தது. செல்வு - செல்லுதல். வு தொழிற்
பெயர்விகுதி, துணிவு, பணிவு என்பவற்றிற்போல, “தொல் பறவை
சுமந்து ஓங்கு தோணிபுரம்“ “நின்பாதம் எல்லாம் நாலஞ்சு
புள்ளினம் ஏந்தினவென்ப” - அரசர் அருள்மொழி.