3878. |
தூமரு
மாளிகை மாட நீடு |
|
தோணி
புரத்திறையை
மாமறை நான்கினொ டங்க மாறும்
வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞான
சம்பந் தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார்
பார்முழு தாள்பவரே. 11 |
11.பொ-ரை:தூய்மையான
வெண்ணிற மாளிகைகள், மாடங்கள்
நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நானகு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும்
வல்லவனும், தானுண்ட ஞானப்
பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக் நமக்குக் கேள்வி ஞானத்தைப்
புகட்டிட நன்மையைச் செய்கின்றவனுமான
திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்க.ள் பொருந்திய
இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும்
பேறு பெறுவர்
கு-ரை:தூமருவு
- சுதை தீற்றியதால் வெண்மை நிறம்
பொருந்திய, மாளிகை. நாமரு (வு) கேள்வி - நாவிற்பொருந்திய
உபதேசங்களால் கேள்வி ஞானத்தைப் புகட்டவல்ல ஞானசம்பந்தன்.
நா என்பது உபதேசத்தை யுணர்த்தலால் ஆகுபெயர். பா(மருவு) -
பாட்டின் இலக்கணம் அமைந்த. பா - காரிய ஆகுபெயர்.
|