| 
         
          | 3886. | பொன்றிகழ் 
            சுண்ணவெண் ணீறுபூசிப் |   
          |  |      	
              புலித்தோ லுடையாகமின்றிகழ் சோதியர் பாடலாடன்
 மிக்கார் வருமாட்சி
 என்றுநல் 
              லோர்கள் பரவியேத்து
 மிராமேச் சுரமேயார்
 குன்றினா லன்றரக் கன்றடந்தோ
 ளடர்த்தார்கொளுங் கொள்கையே.        8
 |        8.பொ-ரை:என்றும் 
        நல்லோர்கள் போற்றி வணங்கும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 கயிலைமலையால் அன்று இராவணனின் அகன்ற வலிமையான
 தோள்களை அடர்த்த சிவபெருமான், நறுமணமிக்க அழகிய
 திருவெண்ணீற்றிணைத் திருமேனியில் பூசி, புலித்தோலாடை
 அணிந்து, மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய், பாடி
 ஆடி வரும் செயலின் பருமையை உணர்பவர் சிவஞானிகளாவர்.
       கு-ரை:பொன் 
        திகழ் - வெண் பொன்னாகிய வெள்ளியைப் போல் விளங்குகின்ற நீறுபூசி. மின்திகழ் சோதியர் - மின்னலைப்
 போல விளங்கும் ஒளியையுடையவராய். சோதியர் - முற்றெச்சம்.
 மிக்காராய் வரும் மாட்சி (அனைத்தும்) அரக்கன் தோளடர்த்தாராகிய இராமேச்சுரம் 
        மேயார் கொள்கைகளேயாகும். பொன் திகழ் -
 பொன்னில் திகழ்வதுபோற் காணப் படுகின்ற எனினுமாம்.
 |