3892. |
மாயவன்
சேயவன் வெள்ளி யவன் |
|
விடஞ்சேரு
மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தர மும்மவ
னென்று வரையாகம்
தீயவ னீரவன் பூமி யவன்றிரு
நாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்வினை
யாயின வீடுமே. 3 |
3.
பொ-ரை: கருநிறமுடைய திருமால், செந்நிறமுடைய
உருத்திரன், வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் விட
முண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி பேதங்களும்,
மற்றும் பல வேறுபாடான மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர்.
மலைபோன்ற திருமேனி உடையவர். நெருப்பு, நீர், பூமி
(உபலட்சணத்தால் காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்)
இவற்றையும் உடம்பாக உடையவர். திருநாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பு வீற்றிருந்தருள்பவர். அப்பெருமானைத்
தொழு வாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும்.
கு-ரை:மாயவன்
- கருநிறத்தான், சேயவன் - செந்நிறத்தன்.
வெள்ளியவன் - வெண்ணிறத்தவன். இவை சதாசிவமூர்த்தியின் ஐம்
முகங்களில் முறையே அகோரம், வாமதேவம், சத்தியோசாத
முகங்களைக் குறிக்கும், உபலக்கணத்தால் பொன்மை, பளிங்கு
நிறங்களையும் உடன் எண்ணித் தற்புருட ஈசான முகங்களையும்
கொள்க. ஆயவன் - ஆகியவன். ஓர் அந்தரமும் அவனென்று ஆகி
- இவ்வாறே ஒவ்வொரு வேறுபாடும் தானேயென்று ஆகி. வரை
ஆகம் - மலை போன்ற உடம்பு. தீயவன் - நெருப்பாயுள்ளவன்.
நீரவன், பூமியவன், தண்ணீராயும் உள்ளவன்; இன்னும் காற்று, வெளி,
பரிதி, மதி, உயிர் இவையும் தன்னுடம்பாக உள்ளவன் எனவும்
உபலக்கணத்தாற் கொள்க. அவன் திருநாரையூரில் இருப்பவன்.
அவனைத் தொழுவார் முற்பிறப்பிற் செய்த வினை முழுதும் விட்டு
ஒழியும். தொழுதல் கரும மாதலால் இப்பிறப்பின் வினையும்,
எடுக்கும் பிறப்பின் வினையும் ஒழிதல் கூறல் வேண்டாவாயிற்று
என்க.திரிமூர்த்தி நிறமே கொள்க. தலைவர்
சடைமேலோர்
|