3895. |
பாரு
றுவாய் மையினார் பரவும் |
|
பரமேட்டி
பைங்கொன்றைத்
தாரு றுமார் புடையான் மலையின்
றலைவன் மலைமகளைச்
சீரு றுமா மறுகிற் சிறைவண்
டறையுந் திருநாரை
யூரு றையெம் மிறைவர்க் கிவையொன்
றொடொன் றொவ்வாவே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான், இந்நிலவுலகம் முழுவதும் புகழ்
பரவும் மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான
பரம்பொருள் ஆவார். பசுமைவாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர். கைலைமலையின்
தலைவர். மலைமகளைச் சிறப்புடன்
ஒரு பாகமாகக் கொண்டவர். வீதிகள் சிறகுகளையுடைய வண்டுகள்
ஒலிக்கின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள பொருள்கள்
ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம்.
கு-ரை:
பார் - பூமி முற்றும். உறு - (புகழ்) பரவுதலையுடைய.
வாய்மையினார் - சைவ சீலத்தையுடையவர்கள். பரவும் - துதிக்கும்.
பரமேட்டி - மேலான இடத்தில்
உள்ளவன், மேலான யாக
சொரூபியாய் உள்ளவன் எனினுமாம். தார் உறும் மார்பு உடையான் -
மாலைகள் அணிந்த மார்பை யுடையவன். மலையின் தலைவன் -
கைலை மலையின் தலைவன். "உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை"
என்றதனால் (தொல். பொருள்.274) மலை என்ற அளவில்
கைலையைக் குறிப்பதறிக. மலைமகளைச் சீர் உறும் -
உமாதேவியாரைச் சிறப்போடு தழுவியிருக்கும். சீர் உறும் - மூன்றம்
உருபும் பயனும் தொக்க தொகை. திருநாரையூர் - மறுகில்
சிறைவண்டு அறையும், பூசி எஞ்சிய கலவைகளை வீதியிற்
கவிழ்த்தலால் அவற்றில் வண்டுகள் ஒலிக்கும், திருநாரையூர் என்க.
இனிப் புலவியிலெறிந்த பூ மாலைகளில் வண்டுகள் மொய்த்து
ஒலித்துலுங்கொள்க.
|