3899.
|
தூசுபு னைதுவ
ராடைமேவுந் |
|
தொழிலாருடம்பினிலுள்
மாசுனைந்துடைநீத்தவர்கண்
மயனீர்மை கேளாதே
தேசுடையீர்கள் தெளிந்தடைமின்
திருநாரை யூர்தன்னில்
பூசுபொடித்த லைவ ரடியா
ரடியே பொருத்தமே 10 |
10.
பொ-ரை: மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும்,
உடம்பிலும், உள்ளத்திலும், அழுக்கினைக் கொண்டு ஆடை
உடுத்தலை ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும்
தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள். மெய்யறிவுடையவர்களே!
சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து,
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
திருவெண்ணீறு பூசிய தலைவராகிய சிவபெருமானின் திருவடி களையும், அவர் அடியார்களின்
திருவடிகளையும் வணங்குவதே
பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள்.
கு-ரை:
தூசு - ஆடையாக. புனை - உடுக்கும். தொழிலார் -
புத்தர். உடம்பில் - உடம்பிலும். உள் - மனத்திலும். மாசு புனைந்து
- அழுக்கையும், அறியாமையையும் அணிந்து. உடை நீத்தவர்கள் -
ஆடையை நீக்கியவராகிய சமணர். ஒழிப்பவற்றைக் கொண்டும்
கொள்வனவற்றை யொழித்தும் உள்ளவரென்ற குறிப்பு. மயல் நீர்மை -மயக்கும் உபதேசங்களைக்
கேளாது. தேசு உடையீர்கள் -
மெய்யறிவுடையீர்களே. தெளிந்து - சிவனே பொருளெனத் தெளிவாக
உணர்ந்து. பூசு பொடித் தலைவர் - திருநீறு பூசிய தலைவர். அடியே
பொருத்தம் ஆம் - பொருந்துவது ஆகும். அவ்வடியையே
அடைமின்.
|