| 
         
          | 3900. | தண்மதி 
            தாழ்பொழில் சூழ் புகலித் |   
          |  | தமிழ்ஞான 
            சம்பந்தன் ஒண்மதி சேர்சடை யானுறையுந்
 திருநாரை யூர்தன்மேல்
 பண்மதி யாற்சொன்ன பாடல் பத்தும்
 பயின்றார் வினைபோகி
 மண்மதி யாதுபோய் வான்புகுவர்
 வானோ ரெதிர்கொளவே.                 11
 |        11. 
        பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த
 தமிழ் வல்ல ஞானசம்பந்தன், ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த
 சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
 திருநாரையூர் என்னும் திருத்தலத்தின் மேல், பயில்வோருக்கு
 இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள்
 பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை
 நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது, தேவர்கள் எதிர்
 கொண்டழைக்க வானுலகை அடைவர்.
      கு-ரை: 
        தண் மதி தாழ் பொழில் - சந்திரன் தங்கும் சோலை சூழ்புகலித் தமிழ் ஞானசம்பந்தன் திருநாரையூர் தன்மேல்
 பண்மதியால் சொன்ன. (பயில்வோர்க்கு) இசையறிவு உண்டாகும்
 வகையாற் பாடிய பாடல் பத்தும் பயின்றார். வினை போகி - வினை
 நீங்கப் பெற்று. மண் - மண்ணுலக இன்பை மதியாது போய்
 வானோர்எதிர் கொள்ள வான் புகுவர்.
 |