| 
         
          | 3916. | நீர்புல்கு 
            புன்சடை நின்றிலங்க |   
          |  | நெடுவெண் 
            மதிசூடித் தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து
 தலையார் பலிதேர்வார்
 ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த
 விறைவர்க் கிடம்போலும்
 பார்புல்கு தொல்புக ழால்விளங்கும்
 பரிதிந் நியமமே.                      5
 |  
             5. 
        பொ-ரை: சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு, இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர்.
 மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர்.
 பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர். என் தோற்றப்
 பொலிவையும், அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான்
 வீற்றிருந்தருளும் இடம், உலகம் முழுவதும் பரவிய பழம்
 புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        தார் - மாலை. புல்கு - பொருந்திய. தலை ஆர் - மண்டையோட்டில் நிறைவிக்கும் பலி தேர்வாராய். ஏர் புல்கு -
 அழகோடு கூடிய. சாயல் எழில் - மிக்க தோற்றப் பொலிவை. எழில்
 - எழுச்சி, வளர்ச்சி. பார் புல்கு - உலகம் முழுவதும் பரவிய தொல்
 புகழால்.
 |