3920. |
நாடினர்
காண்கிலர் நான்முகனுந் |
|
திருமா
னயந்தேத்தக்
கூடல ராடல ராகிநாளுங்
குழகர் பலிதேர்வார்
ஏடலர்
சோர வெழில்கவர்ந்த
இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும்
பரிதிந் நியமமே. 9
|
9.
பொ-ரை: தேடிக் காணாதவர்களாகிய பிரமனும், திருமாலும் பணிந்து ஏத்த
அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து
விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும், அழகு
முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர்
இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என்
அழகைக் கவர்ந்த கள்வர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்
அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி வணங்கும்
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
தேடிக் காணாதவர்களாகிய நான்முகனும் திருமாலும்
என உம்மை விரிக்க. கூடலர் - அவர்களிடத்துக் காணக்
கூடாதவராகி எம்மிடத்து. ஆடலர் ஆகி - விளையாடுதலை
யுடையவராய். நாளும் நாடோறும். குழகர் - அழகினையுடையவர்.
ஏடு அலர் - (கூந்தலிலணிந்த) இதழ்களையுடைய மலர்கள், பாடலர்
ஆடலராய் அடியார் வணங்கும்.
|