3921. |
கல்வள
ராடையர் கையிலுண்ணுங் |
|
கழுக்க
ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா
சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த
நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்
பரிதிந் நியமமே. 10 |
10.
பொ-ரை: காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும்,
கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான
சமணர்களும் கூறும், குற்றமுடைய சொற்களைப் பொருளென
நினைக்க வேண்டா. சுட்ட திருவெண்ணீறு அணிந்து, என் நல்
வளையல்கள் கழல, என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பெண்களின் பற்களைப்
போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை
வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு.
கு-ரை:
கல் - காவிக்கல்லால். வளர் - நிறம் மிகுந்த. ஆடையர்
- புத்தர். கையில் உண்ணும் கழுக்கள் - (சமணர்) கழுக்கையர்
எனப் பின்னர் வருவதறிக. இழுக்கு ஆன சொல் - குற்றமுடைய
சொற்களை. சொல்வளமாக - பயனுடைய சொல்லாக. பல் வளர் -
மாதர் பற்களைப்போல அரும்பு அடர்ந்த (முல்லை) கொல்லை -
காடு வேலி - வேலியாகவுடைய.
|