3924. |
மைவரை
போற்றிரை யோடுகூடிப் |
|
புடையே
மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும்
மிகுக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை
விரும்ப வுடல்வாழும்
ஐவரை யாசறுத் தாளுமென்பர்
அதுவுஞ் சரதமே. 2 |
2.
பொ-ரை: மேகம் படியும் மலைபேன்ற அலைகளோடு
கூடிவரும் கடல், கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும்
மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற, மலையரசன் மகளான உமாதேவியைத் தம்
இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய,
அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும்
குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர்.
அஃது உண்மையேயாம்.
கு-ரை:
ஓதம் - கடலானது. மைவரைபோல் - மேகம் படியும்
மலை போன்ற, திரையோடும் கூடி, (வந்த) வளர் - பருத்த. சங்கம் -
சங்குகளை. கை - கரையின் கண்ணே. மிகுக்கும் - மிகக் குவிக்கும்,
ஓதமானது மலை போல் வரும் அலைகளோடு கலந்து வந்த
சங்குகளைக் கரையின் மிகக் குவிக்கும் கலிக்காமூர் என்க. மெய் -
உடம்பின்கண். வரையான் மகள் - இமயமலையரையன் மகளாகிய
உமையம்மையாரை. பாகன் - இடப்பாகத்தில் உடையவன்.
உடல்வாழும் ஐவர் - பஞ்சேந்திரியங்கள். ஆசு அறுத்து - பற்று
தலை ஒழித்து. ஆளும் - கொள்வான். சரதம் - நிச்சயம் ஆம்.
பாகன் தன்னை விரும்ப அவன் நமது உடலில் வாழும்
ஐவரையறுத்து ஆளும் என்பர் என்பது வினைமுடிபு. ஐவர்
இகழ்ச்சிக்குறிப்பு இவ்வரும் பிறவிப் பௌவநீர்
நீந்தும் ஏழையேற்
கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே (தி.9 திருவிசைப்பா. 81.)
|