3928. |
துறைவளர்
கேதகை மீதுவாசஞ் |
|
சூழ்வான்
மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
மனத்தா னினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
நினையா வினைபோமே. 6 |
6.
பொ-ரை: கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின்
நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு, மிக்க கரு
நிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நால்வேதங்களின்
உட்பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து
போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து
சேர நினையாது. அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும்
நீங்கும்.
கு-ரை:
துறை - கடல் துறை. கேதகை - தாழை. வாசம் -
மகரந்தத்தை (வாசம் - காரிய ஆகு பெயர்) சூழ்வான் - தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதன்
பொருட்டு. மலி - மிக வீசுகின்ற தென்றற்
காற்றோடு. கறை வளரும் - மிகக் கருமையையுடைய கடல். ஓதம் -
அலைகள். கலிக்கும் - ஆரவாரிக்கும். மறை வளரும் - வேதத்தில்
எவரினும் எடுத்து வற்புறுத்தப்படும் பொருள் ஆயினானை நினைந்து
ஏத்த. நிறை (புகழ்) வளரும் புகழ் எய்தும். வாதை - வாதனாமலம்.
நினையா - நம்மையடைய நினையமாட்டா. வினைகளும் போம்.
|