3931. |
அருவரை
யேந்திய மாலுமற்றை |
|
யலர்மே
லுறைவானும்
இருவரு மஞ்ச வெரியுருவா
யெழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை
யான்மகள் பாகன்றன்னை
யுணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத்
தேசுண் டவர்பாலே. 9
|
9.
பொ-ரை: கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய
திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி
வடிவாய் நின்றவரும், திருக்கலிக்காமூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், ஒப்பற்ற மலை
அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச்
செல்வம் வந்தடையும்.
அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை. மேலும் அவர்களிடம்
செம்மையான சிவஞானம் உண்டாகும். அச்சிவஞானத்தால்
முத்திபெறுவர் என்பது குறிப்பு.
கு-ரை:
வரை - கோவர்த்தன மலை. ஒரு - ஒப்பற்ற. செம்மை
- முத்தி. தேசு - சிவஞானம். உண்டு - உளதாகும்.
|