| 
         
          | 3934. | பள்ளம 
            தாய படர்சடைமேற் |   
          |  | பயிலுந் 
            திரைக்கங்கை வெள்ளம தார விரும்பிநின்ற
 விகிர்தன் விடையேறும்
 வள்ளல் வலஞ்சுழி வாணனென்று
 மருவி நினைந்தேத்தி
 உள்ள முருக வுணருமின்க
 ளுறுநோ யடையாவே.                  1
 |        1. 
        பொ-ரை: பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித்
 தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான்.அவர்
 இடபவாகனத்தில் ஏறும் வள்ளல். திருவலஞ்சுழி என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமானை நினைந்து
 போற்றி உள்ளம் உருக உணருமின்கள். உறுநோய் உங்களை
 அணுகாது.
       கு-ரை: 
        பள்ளம் போன்ற சடைமீது கங்கைப் பெருக்கு தங்க விரும்பி நின்ற, விகிர்தன் - வேறுபட்ட தன்மையையுடையவன்;
 தண்ணீர் தேங்கி நிற்குமிடம் பள்ளம் ஆகையினால், சடையைப்
 பள்ளம் என்றார். வள்ளல் வலஞ்சுழியில் (வாழ்நன் என்பதன் மரூஉ
 வாணன்) வாழுபவன் என்று அங்கேபோய்ச் சேர்ந்து, நினைந்து,
 ஏத்தி உள்ளம் உருக உணருமின்கள்.
 |