3941. |
வெஞ்சின
வாளரக்கன் வரையை |
|
விறலா
லெடுத்தான்றோள்
அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று
மடர்த்தா ரழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்று
நணுகு மிடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும்
வலஞ்சுழி மாநகரே. 8 |
8.
பொ-ரை: கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான
இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன்
இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய
தலைவர். அவர் விரும்பி
வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள
சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு
வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அரக்கன் தோள்; அஞ்சு, ஓர் ஆறு, இருநான்கும்,
ஒன்றும் அடர்த்தவர் - (5+6+8+1) இருபதையும் நெருக்கியவர்.
பொழில் வண்டு கெண்டும் - சோலையில் உள்ள மலர்களில்
வண்டுகள் கால் விரலால் ஊரும் வலஞ்சுழி.
|