3952. |
கூசமிலா
தரக்கன் வரையைக் |
|
குலுங்க
வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த
விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற
பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற
திருநாரை யூர்தானே. 8 |
8.
பொ-ரை: கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக்
குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த
திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்சமில்லாத
உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும், இடைவிடாது
தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற
சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கூசம் - கூசுதல் (அம் - தொழிற்பெயர் விகுதி). இற -
ஒழிய. கரவாதார் - வஞ்சமற்ற அடியார்கள்.
|